சென்னை: இந்தியாவில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிறவேற்றப்பட்டதிலிருந்து போராட்டங்களும், எதிர்ப்புகளும் வலுத்து வருகின்றன.
இருந்தும், இம்மாதிரியான எதிர்ப்புகளுக்கு மத்திய அரசு ஒருபோதும் தங்கள் முடிவினை மாற்றிக் கொள்ளப்போவதில்லை என்று உள்துறை அமைச்சர் அமிட் ஷா அண்மையில் அறிவித்திருந்தார்.
இதற்கிடையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று வெள்ளிக்கிழமை நடந்த போராட்டத்தில் காவல் துறையினர் தடியடி நடத்தி உள்ளனர்.
அதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நள்ளிரவில் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல் துறையினரின் இந்த தாக்குதலில் ஒரு சிலர் படுகாயமடைந்ததாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டதாக 120 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் பரவலாகி வருகிறது.
சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் டில்லியில் காவல் துறையினர் தாக்குதலில் ஈடுபட்டது போல், சென்னையிலும் நடந்த இந்த சம்பவம் இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.