கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் இடைக்கால அரசாங்கம் குறித்த விவரங்களை அரசாங்க தலைமை வழக்கறிஞர் அலுவலகம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“ஆம், நான் ஓர் ஊடக அறிக்கையைத் தயாரிக்கிறேன். உள்ளடக்கத்தைப் பொறுத்தவரை (அறிக்கை), தயவுசெய்து காத்திருங்கள் “என்று அரசாங்க தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் மலேசியாகினியிடம் கூறினார்.
கூட்டணி அரசாங்கத்தில் இருந்து 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகியதைத் தொடர்ந்து டாக்டர் மகாதீர் பிரதமர் தம் பதவியிலிருந்து விலகினார். இதனையடுத்து, நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் வீழ்ந்தது.
பெரும்பான்மையினரின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக மாமன்னரிடம் நிரூபிக்க முடிந்தால், அரசாங்கத்தை மீண்டும் உருவாக்க வாய்ப்புள்ளது. அது நடக்கவில்லை என்றால், மறுதேர்தல் நடத்தப்படும்.