மாமன்னரைச் சந்தித்து விட்டு அன்வார், வான் அசிசா வெளியேறினர்

    699
    0
    SHARE
    Ad
    அன்வார் இப்ராகிம் – வான் அசிசா – கோப்புப் படம்

    கோலாலம்பூர் – இன்று திங்கட்கிழமை பிற்பகலில் மாமன்னரைச் சந்தித்த பின்னர் அன்வார் இப்ராகிமும் அவரது துணைவியார் வான் அசிசாவும், அரண்மனையிலிருந்து வெளியேறினர்.

    ஏறத்தாழ 2.30 மணியளவில் அரண்மனைக்கு வந்த அவர்கள் இருவரும், சுமார் 45 நிமிடங்களுக்குப் பின்னர் பிற்பகல் 3.15 மணியளவில் அங்கிருந்து வெளியேறினர்.

    எனினும் மாமன்னருடனான சந்திப்பு குறித்து அறிக்கைகள் எதுவும் வெளியிடப்படவில்லை. பத்திரிகையாளர்கள் சந்திப்பும் நடைபெறவில்லை.