Home One Line P1 “எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள தேர்தல் ஆணையம் விழிப்பு நிலையில் இருக்கும்!”- அசார் அசிசான்

“எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள தேர்தல் ஆணையம் விழிப்பு நிலையில் இருக்கும்!”- அசார் அசிசான்

562
0
SHARE
Ad

கோலாலம்பூர்: உள்நாட்டு அரசியலில் தற்போதைய முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு பொதுத் தேர்தல் தேவை இருந்தால் சட்டத்தால் தேவைப்படும் பணிகளைச் செய்ய தேர்தல் ஆணையம் தயாராக உள்ளதாக தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் ஹாருன் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு முடிவுக்கும் தேர்தல் ஆணையம் தயாராக உள்ளதாக அவர் கூறினார்.

“தேர்தல் ஆணையம் தனது கடமைகளை சட்டத்தின்படி நிறைவேற்றும், நாங்கள் முழு விழிப்பு நிலையுடன் இருக்கிறோம் . தேவைப்பட்டால் தேர்தல் ஆணையம் தனது கடமைகளை சட்டத்தின்படி நிறைவேற்றும்” என்று அவர் இன்று திங்கட்கிழமை மலேசியாகினியிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

நம்பிக்கைக் கூட்டணிக்கு பதிலாக புதிய அரசாங்கத்தை அமைப்பது குறித்த ஊகங்கள் பரவலாக வெடித்ததன் காரணமாக நாட்டின் அரசியல் சூழ்நிலை நேற்று வெப்பமடைந்துள்ளது.