கோலாலம்பூர் – நேற்று திங்கட்கிழமை இரவு பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்ற பெர்சாத்து கட்சியின் உச்சமன்றக் கூட்டத்தில் பெர்சாத்து தலைவர் துன் மகாதீரின் கட்சித் தலைமைக்கான பதவி விலகலை நிராகரிப்பதாக டான்ஸ்ரீ மொகிதின் யாசின் அறிவித்தார்.
அன்வார் இப்ராகிம் குறித்த எந்தவொரு முடிவையும் பெர்சாத்து கட்சி நேற்றைய கூட்டத்தில் எடுக்கவில்லை.
இன்று செவ்வாய்க்கிழமை துன் மகாதீரை பெர்சாத்து கட்சியின் உச்சமன்றத்தினர் நேரில் சென்று அவரே கட்சியின் தலைவராகத் தொடர வேண்டும் என வலியுறுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் மகாதீர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பாரா அல்லது பெர்சாத்து உச்சமன்றத்தின் நெருக்குதலுக்கு இணங்குவாரா என்பது இன்று தெரிந்து விடும்.
மகாதீரின் பிரதமரின் பதவி விலகலை மாமன்னரும் ஏற்றுக் கொண்டு விட்டதால் இனியும் மகாதீர் பெர்சாத்து கட்சியின் தலைவராகத் தொடர மாட்டார் என்றே கருதப்படுகிறது.