Home One Line P1 மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கவே பெரிய அளவிலான அமைச்சரவை ஏற்படுத்தப்பட்டது!- அஸ்மின் அலி

மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கவே பெரிய அளவிலான அமைச்சரவை ஏற்படுத்தப்பட்டது!- அஸ்மின் அலி

555
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நியமித்த அதிக எண்ணிக்கையிலான அமைச்சரவை உறுப்பினர்கள் தற்போது நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களின் பிரதிபலிப்பாகும் என்று அனைத்துலக வணிக மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்காக மிகவும் திறமையான ஓர் அரசாங்கத்தை நடத்துவதற்கு, பிரதமருக்கு உதவும் வகையில் ஆற்றல், பிரதிபலிப்பு மற்றும் கூட்டு மனப்பான்மை முறையில் இது செயல்படும் என்று அவர் கூறினார்.

“ஒருவேளை எண்களைப் பொறுத்தவரை, அது (அமைச்சரவை உறுப்பினர்) பெரியது, ஆனால் இன்றைய சவால்களும் பெரியவை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.”

#TamilSchoolmychoice

“விவேகத்துடன் விஷயங்களை நிர்வகிக்கும் ஓர் அரசாங்கத்தை நாம் விரும்புகிறோம், ஆனால், அதே நேரத்தில், உள்நாட்டு சவால்கள் மட்டுமல்ல, பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்களும் உள்ளன.”

“ஒரு புதிய குழு தேவை, இது சில துறைகளில் தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களை உள்ளடக்கியுள்ளது” என்று நேற்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) இஸ்தானா மெலாவதியில் புதிய அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களுக்கான பதவியேற்பு விழாவுக்கு பின்னர் சந்தித்தபோது அஸ்மின் இவ்வாறு கூறினார்.

புதிய அமைச்சரவையை உருவாக்க பிரதமர் பல அமைச்சர்களை நியமிக்க வேண்டியதன் அவசியத்தை மக்கள் புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கையையும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.