Home One Line P1 கொவிட்-19: ஊழியர் சேமநிதி வாரிய தலைமையகம் மூடப்பட்டது!

கொவிட்-19: ஊழியர் சேமநிதி வாரிய தலைமையகம் மூடப்பட்டது!

676
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஜாலான் ராஜா லாவுட்டில் உள்ள ஊழியர் சேமநிதி வாரியத்தின் (ஈபிஎப்) தலைமையகம் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் மூடப்பட்டு, அடுத்த திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்புரவு மற்றும் கிருமி நீக்கம் செய்வதற்கான வழிமுறைக்கு இது வழி வகுக்கும் என்று அது கூறியுள்ளது.

உறுப்பினர் ஒருவர் கொவிட் -19 நோய்க்கு சாதகமான அறிகுறிகளை வெளிப்படுத்தியதால், மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக அது கூறியது.

#TamilSchoolmychoice

பிப்ரவரி 27 அன்று, ஜாலான் ராஜா லாவுட்டில் உள்ள ஈபிஎப் கோலாலம்பூர் அலுவலகத்தில் அந்த உறுப்பினர் இருந்தார், மார்ச் 3-ஆம் தேதி அந்நோய்க்கு சாதகமாக அறிகுறிகள் அவரிடத்தில் காணப்பட்டது.

“அலுவலகத்திலிருந்து மற்ற அதிகாரிகளும் தனிமைப்படுத்தப்பட்டனர். எந்தவொரு நடவடிக்கைக்கும் ஈபிஎப் அதிகாரிகளுடன் நெருக்கமாக செயல்படுகிறது.”

இதற்கிடையில், மற்ற இடங்களில் உள்ள ஈபிஎப் கிளைகள் வழக்கம் போல் செயல்படும்.