Home One Line P1 “முன் கதவு” வழியாக அரசாங்கத்தை அமைக்க நாடாளுமன்றம் உடனடியாகக் கலைக்கப்பட வேண்டும்!- அனுவார் மூசா

“முன் கதவு” வழியாக அரசாங்கத்தை அமைக்க நாடாளுமன்றம் உடனடியாகக் கலைக்கப்பட வேண்டும்!- அனுவார் மூசா

609
0
SHARE
Ad

கோலாலம்பூர்: புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, 15-வது பொதுத் தேர்தல் வரை தேசிய கூட்டணி (பிஎன்) அரசாங்கம் தாங்காது என்று அம்னோ பொதுச்செயலாளர் அனுவார் மூசா தெளிவுபடுத்தினார்.

ஆகவே, முவாபாக்காட் நேஷனல் ஆரம்பத்தில் விரும்பியபடி, “முன் கதவு” வழியாக அரசாங்கத்தை அமைக்கும் வகையில் நாடாளுமன்றம் உடனடியாகக் கலைக்கப்பட வேண்டும் என்று அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியின் போது சேதமடைந்ததை சரி செய்து, கொவிட் -19 பாதிப்பும் தணிந்தவுடன், முவாபாக்காட் நேஷனல் செய்ய விரும்பியதைப் போலவே, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டவுடன் உடனடியாக முன் கதவு திறக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.”

#TamilSchoolmychoice

“நாங்கள் அதை மக்களுக்கு வழங்குகிறோம்.” என்று அவர் டுவிட்டரில் பதிவிட்டார்.

நேற்று கூட்டரசுப் பிரதேச அமைச்சராக பதவியேற்ற அனுவார், பின் கதவு வழியாக அரசாங்கத்தை அமைத்ததாகக் கூறி பிஎன் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.