Home One Line P1 கொவிட்-19: விளையாட்டு, இணைப் பாட நடவடிக்கைகள் ஒத்திவைக்க கல்வி அமைச்சு உத்தரவு!

கொவிட்-19: விளையாட்டு, இணைப் பாட நடவடிக்கைகள் ஒத்திவைக்க கல்வி அமைச்சு உத்தரவு!

522
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19 பாதிப்பைத் தொடர்ந்து விளையாட்டு நடவடிக்கைகள் மற்றும் இணைப் பாட நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து பொதுக் கூட்டங்களையும் ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சகம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

அமைச்சின் கூற்றுப்படி, இந்த உத்தரவு சுகாதார அமைச்சின் முந்தைய அறிக்கைக்கு ஏற்ப வெளியிடப்பட்டதாகவும், பாதிப்பைத் தடுக்க பொதுமக்கள் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை தாமதப்படுத்த வேண்டும் என்றும் அது கேட்டுக் கொண்டது.

“மார்ச் மாதத்திற்கான விளையாட்டுத் திட்டங்கள் மற்றும் இணைப் பாடத்திட்ட நடவடிக்கைகள் போன்ற பொதுக் கூட்டங்களை உள்ளடக்கிய அனைத்து கல்வி அமைச்சின் திட்டங்களும் பிற்காலத்திற்கு ஒத்திவைக்கப்படுவதை கல்வி அமைச்சு இதன்மூலம் தீர்மானிக்கிறது.”

#TamilSchoolmychoice

“அனைத்து கல்வி அமைச்சு உறுப்பினர்களும் சுகாதார அமைச்சு வழங்கிய கொரொனாவைரஸ் தொற்று நோயின் நிலையான இயக்க முறைமை உடன் முழுமையாக இணங்குமாறு நினைவூட்டப்படுகிறார்கள்.”

“சுகாதார அமைச்சு அறிவித்தபடி கொவிட் -19 தொற்று பாதிப்பை தற்போது அனுபவிக்கும் பகுதிகள் அல்லது நகரங்களுக்கு வெளிநாட்டு பயணத்தை ஒத்திவைக்க அறிவுறுத்தப்படுகிறது,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இன்றுவரையிலும் , மலேசியாவில் ஒன்பது புதிய கொவிட் -19 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. இது நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை 158-ஆக உயர்த்தி உள்ளது.