கோலாலம்பூர்: கொவிட்-19 நோய்த்தொற்று பரவியதைத் தொடர்ந்து அரசாங்கம் வழங்கிய அறிவுறுத்தல்களின்படி, ஜூன் 30 வரை திட்டங்கள், செயல்பாடுகள், மாநாடுகள், கூட்டங்கள் மற்றும் பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கு அனைத்து அமைப்புகளுக்கும் தடைசெய்யப்பட்டுள்ளதாக மலேசிய சங்கங்கள் பதிவுத் துறை தெரிவித்துள்ளது.
“இந்த கூட்டங்கள் அந்தந்த அமைப்புகளின் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நடத்தப்பட வேண்டும். இருப்பினும், இந்த நேரத்தில் கொவிட்-19 பதிப்பு அதிகரித்து வருவதால், அனைத்து நிறுவனங்களும் நிகழ்ச்சிகள், செயல்பாடுகள், மாநாடுகள், கூட்டங்களை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் உத்தரவுகளின்படி ஜூன் 30 வரை அமைப்பின் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படக் கூடாது “என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, நாடு முழுவதும் கிளைகள் உட்பட அமைப்பின் அனைத்து மட்டங்களிலும் இந்தத் தடை பொருந்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சங்கங்கள் சட்டம் 1966 (சட்டம் 335)- இன் பிரிவு 3ஏ விதிகளின் கீழ் பதிவாளரின் அதிகாரங்களின்படி இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.