கோலாலம்பூர்: டாக்டர் மகாதீர் முகமட் பெர்சாத்து அவைத் தலைவர் பதவியைத் தற்காக்க உள்ளார்.
முன்னாள் பிரதமரான அவர் தனது வேட்புமனு பாரத்தை செலாயாங் பெர்சாத்து பிரிவு தலைவர் சுல்கிப்லி முகமட் மூலம் பெர்சாத்து தலைமையகத்தில் சமர்ப்பித்தார்.
நேற்று திங்கட்கிழமை சுமார் மதியம் 1.40 மணிக்கு வேட்புமனு பாரம் சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்கிடையில், மொகிதின் யாசின் இன்று திங்கட்கிழமை தனது அரசியல் செயலாளர் மூலம் தலைவர் பதவிக்கான தமது வேட்புமனுவை சமர்ப்பித்தார்.
இதன் மூலமாக மகாதீரின் பதவிக்கு, மொகிதின் போட்டியிடக்கூடும் என்ற வதந்தியை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.
இதனிடையே, அடுத்த மாதம் நடைபெறும் கட்சித் தேர்தலில் முகரிஸ் மகாதீர் பெர்சாத்து பதவிக்கு மொகிதின் யாசினுக்கு எதிராக போட்டியிடுகிறார்.
மேலும், செராஸின் துணைத் தலைவர் முகமட் பாயிஸ் அஸ்லி ஷாம் போட்டியிட முன்வந்துள்ள நிலையில் கட்சியின் தலைவர் பதவிக்கு மூன்று முனை போட்டி நிலவுகிறது.