Home One Line P1 நெருக்கடி காலங்களில் வேறுபாடுகளைக் கடந்து மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்!- நஜிப், குவான் எங்

நெருக்கடி காலங்களில் வேறுபாடுகளைக் கடந்து மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்!- நஜிப், குவான் எங்

686
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் ஆகியோர் கொவிட் -19 பாதிப்பை எதிர்கொள்வதில் மக்கள் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

நெருக்கடி மற்றும் அச்சுறுத்தல் காலங்களில், மலேசியர்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி நஜிப் நேற்று செவ்வாய்க்கிழமை தனது முகநூலில் ஓர் அறிக்கையை வெளியிட்டார்.

இந்த அறிக்கையில் 2014-ஆம் ஆண்டில் கிளந்தான் மந்திரி பெசார் அகமட் யாகோப் உடனான ஒரு படமும், 2017-ஆம் ஆண்டில் அப்போது பினாங்கு முதலமைச்சராக இருந்த லிம் குவான் எங் உடன் அவர் இருந்த படத்தையும் அவர் பதிவிட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

“எப்படியிருந்தாலும், நெருக்கடி மற்றும் அச்சுறுத்தல்கள் காலங்களில் , ​​மலேசியர்கள் ஒன்றாக இருக்க வேண்டும்.”

“நாம் ஒன்றிணைய வேண்டும். எல்லா சச்சரவுகளையும் நிராகரித்து, வேறுபாடுகளையும் நிராகரிக்கவும்.”

“இந்த நேரத்தில் நம்மில் எவருக்கும் தடையாக இருக்க எதுவுமில்லை. இனவாதம்? மதம்? அரசியல் புரிதல்? கூடாது.”

“மலாய்க்கரர், சீனர், இந்தியர், இஸ்லாமியர், இந்து மதம், கிரிஸ்துவர், ஆளும் அரசாங்கம், எதிர்க்கட்சி, என்று நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.” என்று அவர் கூறினார்.

நஜிப்பின் அறிக்கையை லிம் குவான் எங் வரவேற்றார். நெருக்கடியை மலேசியர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

“ஒரு நாடு நெருக்கடியில் இருக்கும்போது, ​​நாம் மலேசியர்களாக ஒன்றாக எதிர்கொள்ள வேண்டும்.”

“மக்கள் சிக்கலில் இருக்கும்போது, ​​எனக்கும் உங்களுக்கும் இடையில் எந்த விதிமுறைகளும் இல்லை. ” என்று அவர் முகநூல் வழியாக கூறினார்.

இதற்கிடையில், இந்த பாதிப்பால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர வணிகர்களுக்கு உதவுமாறு லிம் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தார்.

“கடைகள், தொழிற்சாலைகளை மூட வேண்டிய சிறு, நடுத்தர வணிகர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு குறிப்பாக சிங்கப்பூரில் பணிபுரியும் நூறாயிரக்கணக்கான மலேசியர்களுக்கு அரசாங்கம் உதவும் என்று எதிர்பார்க்கிறேன்” என்று அவர் கூறினார்.