கோலாலம்பூர்: தொற்று நோய்களைத் தடுப்பது தொடர்பான 2020 மத்திய அரசின் வர்த்தமானியை சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் இன்று புதன்கிழமை வெளியிட்டது.
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் திங்களன்று அறிவித்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்தும்போது பின்பற்ற வேண்டிய முக்கியமான விதிமுறைகளை இந்த செய்தி கோடிட்டுக் காட்டியுள்ளது.
இந்த விதிமுறைகள் மார்ச் 18 முதல் 2020 மார்ச் 31 வரையிலான காலத்திற்கு நடைமுறைக்கு வருகின்றன.
இந்த விதிகளின்படி, எந்தவொரு விதிமுறைகளையும் மீறுபவர்களுக்கு 1,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும், அல்லது ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.