Home One Line P1 கொவிட்-19: தென் கொரியா போல பாரிய பரிசோதனைகளை நடத்த மலேசியா தயாராகிறது!

கொவிட்-19: தென் கொரியா போல பாரிய பரிசோதனைகளை நடத்த மலேசியா தயாராகிறது!

563
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19-இன் பரவலைக் குறைக்க தென் கொரியா பாரிய பரிசோதனையை நடத்தி வருவதாகவும், மலேசியாவும் அதே மாதிரியான பரிசோதனையை அதிகரித்து வருவதாகவும் சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

கொவிட் -19 பரவத் தொடங்கியபோது, ​​ஆய்வகத்தால் ஒரு நாளைக்கு 3,500 மாதிரிகளை மட்டுமே சோதிக்க முடியும், ஆனால், தற்போது ஒரு நாளைக்கு 7,000 பரிசோதனைகளாக அதிகரித்துள்ளது. அடுத்த மாதம் ஒரு நாளைக்கு 16,000-ஆக அதிகரிக்கும் என்று நூர் ஹிஷாம் கூறினார்.

#TamilSchoolmychoice

“தென் கொரிய அனுபவத்திலிருந்து நாம் கற்றுக்கொண்டோம். அவர்கள் ஒரு நாளைக்கு 20,000 சோதனைகள் செய்கிறார்கள். ஆகவே, வெகு தொலைவில் இல்லை, அடுத்த ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் 16,500 பரிசோதனைகளை (ஒரு நாள்) செய்வோம்.”

“எனவே நாங்கள் தொடர்ந்து அதிகமானவர்களைத் பரிசோதிப்போம். மேலும் அதிகமான (பாதிக்கப்பட்ட) நபர்களைக் கண்டறிய முடியும் என்று நம்புகிறோம்” என்று அவர் நேற்று செவ்வாய்க்கிழமை புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

நேற்றுவரை, சுகாதார அமைச்சகம் 18,416 கொவிட் -19 பரிசோதனைகளை நடத்தியுள்ளது.

அதிகரித்த பரிசோதனைகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை விரைவாகக் கண்டறியவும், தொற்றுநோய்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், தொற்றைத் தடுக்கவும் விரைவில் அவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதார அமைச்சகம் உதவும் என்று நூர் ஹிஷாம் நம்பிக்கை தெரிவித்தார்.