Home One Line P1 கொவிட்-19: ஸ்ரீ பெட்டாலிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் விரைந்து பரிசோதனைக்கு முன்வர வேண்டும்- சிலாங்கூர் சுல்தான்

கொவிட்-19: ஸ்ரீ பெட்டாலிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் விரைந்து பரிசோதனைக்கு முன்வர வேண்டும்- சிலாங்கூர் சுல்தான்

625
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஸ்ரீ பெட்டாலிங் மசூதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் கொவிட் -19 பரிசோதனைக்கு முன்வருமாறு சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா கேட்டுக் கொண்டார்.

அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் இன்னும் பிடிவாதமாக இருப்பதாகவும், உடனடியாக முன்வந்து பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவர் தமது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“பிப்ரவரி மாத இறுதியில் கோலாலம்பூரில் உள்ள ஸ்ரீ பெட்டாலிங் மசூதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நபர்கள் பரிசோதனைக்கு வருமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.”

“பாதிப்புத் தொடர்ந்தால் மற்றும் தொற்றுநோய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தால், அது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் காலத்தை நீட்டிக்கும் என்று அவர் கவலைப்படுகிறார்.”

“இது மக்களின் அன்றாட நடவடிக்கைகளை மேலும் சீர்குலைக்கும் மற்றும் வணிகர்கள் மற்றும் சிறு தொழில்முனைவோர் போன்ற பல்வேறு மட்டங்களில் உள்ள குழுக்களின் வருமானத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று அப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.