கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு தொடர்பான அரசாங்கத்தின் சமீபத்திய அறிவிப்பைத் தொடர்ந்து கெந்திங் மலேசியா பெர்ஹாட் தனது உல்லாசப்போக்கிட நடவடிக்கைகளை ஏப்ரல் 14-ஆம் தேதி வரை நிறுத்தியுள்ளது.
வியாழக்கிழமை புர்சா மலேசியாவுக்கு அளித்த அறிக்கையில், இந்த நிறுத்தமானது, ரிசார்ட்ஸ் வேர்ல்ட் கெந்திங், ரிசார்ட்ஸ் வேர்ல்ட் அவானா, ரிசார்ட்ஸ் வேர்ல்ட் கிஜால் மற்றும் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் லங்காவி ஆகியவற்றை பாதித்துள்ளது.
நேற்று புதன்கிழமை, பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மார்ச் 31-ஆம் தேதி முதல் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்தார்.
மலேசியாவில் கொவிட் -19 இறப்பு எண்ணிக்கை இன்று வியாழக்கிழமை 23 – ஆக உயர்ந்துள்ளது.
ரிசார்ட்ஸ் வேர்ல்ட் பர்மிங்காம் மற்றும் இங்கிலாந்தில் உள்ள நில அடிப்படையிலான அனைத்து சூதாட்ட விடுதிகளும் உள்ளிட்ட அதன் இங்கிலாந்து நடவடிக்கைகளும் தற்காலிகமாக மூடப்பட்டதாக கெந்திங் மலேசியா கூறியது.