Home One Line P1 கொவிட்-19: வெளிநாட்டு பயண வரலாறு உள்ளவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும்!

கொவிட்-19: வெளிநாட்டு பயண வரலாறு உள்ளவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும்!

525
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19 பாதிப்புக்குள்ளானவர்களுடன் தொடர்பு அல்லது வெளிநாட்டு பயண வரலாறு உள்ளவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சின் இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா நினைவுபடுத்தினார்.

இத்தாலியில் இருந்து திரும்பிய ஒரு நோயாளியின் உதாரணத்தை அவர் மேற்கோள் காட்டி, சரவாக்கில் அவரால் ஐந்து பேர் இறந்ததை நூர் ஹிஷாம் சுட்டிக் காட்டினார்.

#TamilSchoolmychoice

“கொவிட் -19 சம்பவத்தின் நெருங்கிய தொடர்பு வரலாறு, வெளிநாட்டிற்கு பயணம் செய்த வரலாறு அல்லது கொவிட்-19 நோய்த்தொற்று உள்ளவருடன் நெருங்கிய தொடர்பு இருந்தால் சுகாதார அமைச்சுடன் துல்லியமான தகவல்களை பொதுமக்கள் வழங்குவது முக்கியம்”

“எடுத்துக்காட்டாக, சரவாக்கில் நடந்த சம்பவத்தில், விசாரணையின் முடிவுகளிலிருந்து, சம்பந்தப்பட்ட நபர் இத்தாலிக்கு பயணம் செய்த வரலாறு உள்ளது.”

“இதுவரை, அவரால் கொவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ள 37 பேர் என்று கண்டறியப்பட்டுள்ளனர். ஐந்து பேர் மரணம் அடைந்துள்ளனர். ஒருவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.” என்று அவர் குறிப்பிட்டார்.