Home One Line P1 கொவிட்-19: பாதிக்கப்படாத பகுதிகளில் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு மீட்கப்படலாம்!

கொவிட்-19: பாதிக்கப்படாத பகுதிகளில் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு மீட்கப்படலாம்!

888
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய பாதுகாப்பு மன்றம் (எம்கேஎன்) மற்றும் உள்துறை அமைச்சகம் இணைந்து கொவிட் -19 பாதிப்பைத் தடுப்பதற்காக நாளை வியாழக்கிழமை புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் இயக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நடமாட்டக் கட்டுப்பட்டு ஆணையின் இரண்டாவது கட்டம் ஏப்ரல் 14-ஆம் தேதியுடன் முடிவடைந்த பிறகு இப்புதிய இயக்க நடைமுறைகள் பயன்படுத்தப்படும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் முன்னதாக தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

புதிய விதிகளின்படி, கொவிட் -19 நோய்த்தொற்று காரணமாக அதிகமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகள் தொடர் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதுடன், பாதிப்பில்லாத பகுதிகளில் மக்களுக்கு வெளியேற போதுமான சுதந்திரத்தை அளிக்கலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.