Home One Line P1 கொவிட்-19: நாட்டில் 26 பகுதிகள் சிவப்பு மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன- சிலாங்கூரில் அதிகமான சம்பவங்கள்!

கொவிட்-19: நாட்டில் 26 பகுதிகள் சிவப்பு மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன- சிலாங்கூரில் அதிகமான சம்பவங்கள்!

510
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட்-19 பாதிப்புக் காரணமாக சிவப்பு மண்டலமாக நாட்டில் 26 மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிரம்பான் 41 நேர்மறையான சம்பவங்களை பதிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய நெருக்கடி தயார் நிலை மற்றும் அவசரநிலை மையம் (சிபிஆர்சி) தெரிவித்துள்ளது.

ஆகக் கடைசியாக மலாக்கா தெங்கா சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தப்பட்டது .

#TamilSchoolmychoice

நேற்று திங்கட்கிழமை நண்பகல் வரை சிரம்பானில் 260 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இது முந்தைய நாள் சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் அதிகம் எனவும் அது குறிப்பிட்டுள்ளது.

சிலாங்கூரில் இன்னும் அதிகமான எண்ணிக்கையிலான கொவிட் -19 நேர்மறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.