Home One Line P1 சபா, சரவாக் மாநிலங்களுக்கான விமானச் சேவையை மாஸ் நிறுவனம் மீண்டும் தொடங்குகிறது!

சபா, சரவாக் மாநிலங்களுக்கான விமானச் சேவையை மாஸ் நிறுவனம் மீண்டும் தொடங்குகிறது!

811
0
SHARE
Ad
படம்: நன்றி பெர்னாமா

கோலாலம்பூர்: மலேசியா ஏர்லைன்ஸ் பெர்ஹாட் இந்த வாரம் தொடங்கி சபா மற்றும் சரவாக் மாநிலங்களுக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கும்.

கோலாலம்பூரிலிருந்து கூச்சிங், மிரி மற்றும் கோத்தா கினாபாலு ஆகிய இடங்களுக்கு வாரத்திற்கு ஒரு முறை விமானச் சேவை தொடங்க இருப்பதை மலேசியா ஏர்லைன்ஸ் அறிவித்ததாக போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் தெரிவித்தார்.

மிரி-பிந்துலு, கூச்சிங்-சிபு-கூச்சிங் மற்றும் சிபு-பிந்துலு வழித்தடங்களுக்கான விமான சேவைகள் இணைக்கப்படுவதை உறுதி செய்யும் என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“தேவை அதிகரித்தால், அவர்கள் அடுத்த வாரம் தொடங்கி கூச்சிங் அல்லது மிரி அல்லது கோத்தா கினபாலுக்கு அதிக விமான சேவைகளைச் சேர்ப்பார்கள்.”

“எனவே, சரவாக் மாநிலம் மலேசியாவின் தீபகற்பத்துடன் தொடர்ந்து இணைக்கப்படும்,” என்று அவர் கூறினார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த இடைக்காலத்தில் விமான சேவை நிறுத்தப்பட்டதை மலேசியா ஏர்லைன்ஸ் மற்றும் ஏர்ஆசியா நிறுவனங்கள் மறுபரிசீலனை செய்யுமாறு அவர் முன்பு கோரியிருந்தார்.