Home One Line P2 கொவிட்-19: “தேசிய சுகாதார சேவை என் உயிரைக் காப்பாற்றியது!”- போரிஸ் ஜோன்சன்

கொவிட்-19: “தேசிய சுகாதார சேவை என் உயிரைக் காப்பாற்றியது!”- போரிஸ் ஜோன்சன்

521
0
SHARE
Ad

இலண்டன்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்.

இலண்டனில் உள்ள செயின்ட் தோமஸ் மருத்துவமனையில் மூன்று இரவுகளை தீவிர சிகிச்சையில் கழித்த ஜோன்சன், நாட்டின் பிரதமர் இல்லமான செக்கரில் சிறிது காலம் தங்கியிருப்பார் என்று அரசாங்கம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

ஆனால், நாட்டின் தடைக் கட்டுப்பாட்டை எப்போது எளிதாக்குவது என்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகளில் அவர் விரைவில் கையெழுத்திடுவார் என்று நம்பப்படுவதாக அது கூறியது.

இதனிடையே, தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட உணர்ச்சிபூர்வமான ஐந்து நிமிட காணொளியில், ஜோன்சன் நாட்டின் தேசிய சுகாதார சேவைக்கு தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.