Home One Line P1 கொவிட்-19: மூன்று சுகாதார பணியாளர்கள் இதுவரையிலும் மரணமுற்றுள்ளனர்!

கொவிட்-19: மூன்று சுகாதார பணியாளர்கள் இதுவரையிலும் மரணமுற்றுள்ளனர்!

362
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சுகாதார அமைச்சின் மொத்தம் 325 உறுப்பினர்கள் இன்றுவரை கொவிட்-19 நோய்க்குட்பட்டுள்ளனர். அதில் மூன்று இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

” சுகாதார அமைச்சின் உறுப்பினர்களிடையே மொத்த கொவிட்-19 நேர்மறை சம்பவங்களில், 185 சம்பவங்கள் முழுமையாக மீட்கப்பட்டு வெளியேற்றப்பட்டுவிட்டனர். 137 சம்பவங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மூன்று பேர் மரணமுற்றுள்ளனர்.”

“அவர்களில் 77 மருத்துவ பணியாளர்கள், 66 செவிலியர்கள், 34 பட்டதாரி மருத்துவ பணியாளர்கள், 23 மருத்துவ நிபுணர்கள், 21 மருத்துவ உதவிப் பணியாளர்கள் மற்றும் 104 பிற துறையைச் சார்ந்தவர்கள்” என்று அவர் இன்று தெரிவித்தார்.