Home One Line P1 கொவிட்-19: சிங்கப்பூரில் 1,037 சம்பவங்கள் பதிவு

கொவிட்-19: சிங்கப்பூரில் 1,037 சம்பவங்கள் பதிவு

769
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19 காரணமாக சிங்கப்பூரில் இன்று வியாழக்கிழமை 1,037 சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலமாக நாட்டில் மொத்தமாக சுமார் 11,205 சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது.

பெரும்பாலான சம்பவங்கள் வெளிநாட்டு தொழிலாளர் தங்குமிடங்களிலிருந்து வந்தவை என்றும், 21 சம்பவங்கள் மட்டுமே சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தர குடியிருப்பாளர்கள் சம்பந்தப்பட்டவை என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“நாங்கள் இன்னும் சம்பவங்களின் மூலத்தைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். மேலும் தகவல்கள் இன்றிரவு வெளியிடப்படும்” என்று அமைச்சகம் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

புதன்கிழமை (ஏப்ரல் 22) நண்பகல் வரை, சிங்கப்பூர் அரசு எட்டு புதிய நோய் தொற்றுக் கண்ட குழுவினரை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவை பெரும்பாலும் வெளிநாட்டவர்கள் தங்குமிடங்களை உள்ளடக்கியது என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.