சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கொவிட்-19 சம்பவங்களை மேற்கோளிட்டு, 15,000 கொவிட் -19 நோயாளிகள் தங்குவதற்கு பெரிய அளவிலான கட்டுமானத்தை சிங்கப்பூர் மேற்கொண்டு வருவதாக டி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக, 2017- ஆம் ஆண்டில் துறைமுக இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர், காலியாக உள்ள முனையப் பகுதிக்குள் ஒரு பெரிய அளவிலான கூடாரங்கள் அமைக்கப்பட்டு வருவதை அது சுட்டிக் காட்டியது. கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகளுடன் இப்பகுதியில் பளுதூக்கிகள் பயன்படுத்தி பெரிய கூடாரங்கள் நிறுவப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.
கடந்த சில வாரங்களாக, சிங்கப்பூர் அரசாங்கம் ஆரோக்கியமான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்குமிடத்தில் வைரஸ் பரவுவதைத் தடுக்க அவர்களுக்கு பல இடங்களை வழங்கியுள்ளது.
வியாழக்கிழமை நண்பகல் நிலவரப்படி, அக்குடியரசில் 1,037 புதிய கொவிட்-19 நோய்த்தொற்றுகள் பதிவாகி இருப்பதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் மொத்தமாக இப்போது 11,178 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.