Home One Line P1 உணவுகளை விநியோகிக்கும் வாகன ஓட்டுனர்கள் வேகமாக செல்வதை தவிர்க்கவும்

உணவுகளை விநியோகிக்கும் வாகன ஓட்டுனர்கள் வேகமாக செல்வதை தவிர்க்கவும்

671
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது உணவு மற்றும் பொட்டலங்களை அனுப்பும் இரு சக்கர ஓட்டுனர்கள் தங்கள் பொட்டலங்களை அனுப்புவதற்காக வேகமாக செல்ல வேண்டாம் என்றும், உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

கோலாலம்பூர் போக்குவரத்து அமலாக்க மற்றும் புலனாய்வுத் துறைத் தலைவர் சுல்கிப்ளி யஹ்யா கூறுகையில் , சேவையைச் செயல்படுத்தும்போது ஓட்டுனர்களின் மனதில் பாதுகாப்புக்கு முன்னுரிமை இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

“பொட்டலங்கள் மற்றும் உணவு விநியோக ஓட்டுனர்கள் வேகமாக செல்வது ஆபத்தானது என்பதால் வேகமாக சவாரி செய்ய முயற்சிக்கக்கூடாது” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது வெற்று சாலைகளில் வேகத்தை அதிகரிக்க சிலர் சாதகமாக பயன்படுத்தக்கூடும் என்பதால், அனைத்து சாலை பயனர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சுல்கிப்ளி கூறினார்.