Home One Line P2 போயிங் தனது 16,000 தொழிலாளர்களை வேலை நிறுத்தம் செய்கிறது

போயிங் தனது 16,000 தொழிலாளர்களை வேலை நிறுத்தம் செய்கிறது

630
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுநோய் பாதித்ததன் காரணமாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியைத் தொடர்ந்து போயிங் அதன் சுமார் 10 விழுக்காட்டு பணியாளர்களை குறைக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

கொவிட் -19 காரணமாக உற்பத்தி குறைக்கப்பட்டதாலும், தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டதாலும் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டியுள்ளது என்று தலைமை நிர்வாக அதிகாரி டேவ் கால்ஹவுன் தெரிவித்தார்.

“நாங்கள் தன்னார்வ பணிநீக்கங்கள் உட்பட எங்கள் பணியாளர்களை சுமார் 10 விழுக்காடடு வரை குறைக்கத் தொடங்கினோம்” என்று கால்ஹவுன், நிறுவன ஊழியர்களுக்கு ஒரு காணொளி செய்தியில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அமெரிக்காவின் மிகப்பெரிய வான்வழி நிறுவனமான போயிங் உலகளவில் கிட்டத்தட்ட 160,000 தொழிலாளர்களைப் பயன்படுத்துகிறது.

இந்த கொவிட்-19 பாதிப்பிலிருந்து, 26 மில்லியன் அமெரிக்கர்கள் வேலை இழந்துவிட்டனர் மற்றும் போயிங்கின் பணியாளர்களைக் குறைப்பது பொருளாதாரத்திற்கு அழுத்தம் கொடுக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.