Home One Line P1 நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக அன்வார் பரிந்துரைக்கப்பட்டார்

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக அன்வார் பரிந்துரைக்கப்பட்டார்

529
0
SHARE
Ad

கோலாலம்பூர்: போர்ட் டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் மன்றம் ஒப்புக் கொண்டுள்ளது என்று நம்பிக்கைக் கூட்டணி செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட எதிர்க்கட்சி கட்சிகளுக்கு தலைவராக தேர்தெடுக்க முன்னுரிமை அளிக்கப்பட்டதாக அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

“அதே நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதும் எதிர்க்கட்சி முகாமில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களையும் கருத்தில் கொண்டு இது செயல்படுத்தப்பட்டது.”

#TamilSchoolmychoice

“அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஜசெக , எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விரும்பவில்லை என்று நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கல் மன்றத்திடம் அறிவித்துள்ளது,” என்று அவர் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பான கடிதங்கள் முறையே திங்கள்கிழமை மற்றும் நேற்று முறையே பிரதமர் துறையில் மக்களவை சபாநாயகர் மற்றும் அமைச்சரின் அலுவலகங்களுக்கு கையால் வழங்கப்பட்டதாக சைபுடின் நசுத்தியோன் கூறினார்.