வாஷிங்டன்: உலகளவில் கொவிட்19 தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 மணி நேரத்திற்குள் மேலும் 6,000 பேராக அதிகரித்துள்ளது.
இந்த தொற்று நோய்க் காரணமாக ஏற்பட்ட மொத்த இறப்பு எண்ணிக்கை இப்போது 267,000- க்கும் மேல் அதிகமானதாகும்.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிவரங்களின்படி, இரு நாடுகள் இப்போது 30,000 எண்ணிக்கையில் உள்ளன, மேலும் மூன்று நாடுகள் 20,000 சம்பவங்களை பதிவு செய்துள்ளன.
அமெரிக்கா அதிகமான உயிரிழப்புகளைப் பதிவு செய்துள்ளது. 75,000- க்கும் அதிகமான இறப்புகளைக் கொண்ட ஒரே நாடாகவும் அது உள்ளது.
பிரிட்டனில் மொத்தமாக 30,689 பேர் மரணமுற்றுள்ளனர்.
இத்தாலி மற்றும் ஸ்பெயின், முறையே 29,958 மற்றும் 25,857 பேர் இறந்துள்ளனர்.