Home One Line P2 முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தில் மேலும் 1.5 பில்லியன் டாலர்கள் முதலீடு

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தில் மேலும் 1.5 பில்லியன் டாலர்கள் முதலீடு

776
0
SHARE
Ad

மும்பை – உலகம் முழுவதும் பொருளாதார வீக்கம் காணப்பட்டு வரும் வேளையில் ஆசியாவிலேயே மிகப் பெரிய பணக்காரராக உருவெடுத்திருக்கிறார் முகேஷ் அம்பானி (படம்).

இவர் மீதும், இவரது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அவரது தொலைத் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனமான ஜியோ மீதும் தொடர்ந்து நம்பிக்கை வைத்து பெரிய அளவில் முதலீடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஆகக் கடைசியாக விஸ்தா இக்குவிட்டி பார்ட்னர்ஸ் (Vista Equity Partners) என்ற முதலீட்டு நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜியோ நிறுவனங்களில் 1.5 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ளது.

#TamilSchoolmychoice

இதன் மூலம் 2.3 விழுக்காட்டுப் பங்குகளை ஜியோ நிறுவனங்களில் விஸ்தா பெறும்.

ஏற்கனவே, பேஸ்புக் நிறுவனம் 10 விழுக்காட்டுப் பங்குகளுக்காக 5.7 பில்லியன் டாலர்களை ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து சில்வர் லேக் என்ற முதலீட்டு நிறுவனம் 753 மில்லியன் டாலர்களை அதே நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.

இந்த முதலீடுகளைத் தொடர்ந்து அடுத்த சில நாட்களிலேயே விஸ்தா 1.5 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது.

2021-ஆம் ஆண்டுக்கு முன்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை கடன்கள் இல்லாத நிறுவனமாக உருமாற்றும் இலக்கைக் கொண்டிருக்கிறார் முகேஷ் அம்பானி. இதற்காக தொடர்ந்து புதிய முதலீடுகளை அவர் ஈர்த்து வருகிறார்.