Home One Line P2 சிங்கப்பூரில் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 876!

சிங்கப்பூரில் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 876!

727
0
SHARE
Ad

சிங்கப்பூர்: கொவிட்19 நோய்த்தொற்றுக்கு கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக பாதிப்பு கண்டவர்களின் எண்ணிக்கை 876 என சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 10) அறிவித்தது.

இதன் மூலமாக அக்குடியரசில் மொத்தமாக இதுவரையில் 23,336 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

புதிய பாதிப்புகளில் 3 பேர் மட்டுமே சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தர குடியிருப்பாளர்கள் ஆவர். எஞ்சியவர்கள் குடியிருப்புகளில் தங்கியிருந்த  வெளிநாட்டு தொழிலாளர்கள் என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.

#TamilSchoolmychoice

கொவிட்19 பாதிப்புகளால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20 எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கொவிட்19 பாதிப்பிருந்தாலும் மேலும் 6 பேர் மற்ற உடல்நலக் கோளாறுகளால் மரணமடைந்தனர்.

தென்கிழக்காசியாவிலேயே அதிக கொவிட்19 பாதிப்புகளைக் கொண்ட நாடாக சிங்கை உருவெடுத்துள்ளது.