இதன் மூலமாக அக்குடியரசில் மொத்தமாக இதுவரையில் 23,336 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
புதிய பாதிப்புகளில் 3 பேர் மட்டுமே சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தர குடியிருப்பாளர்கள் ஆவர். எஞ்சியவர்கள் குடியிருப்புகளில் தங்கியிருந்த வெளிநாட்டு தொழிலாளர்கள் என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.
கொவிட்19 பாதிப்புகளால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20 எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கொவிட்19 பாதிப்பிருந்தாலும் மேலும் 6 பேர் மற்ற உடல்நலக் கோளாறுகளால் மரணமடைந்தனர்.
தென்கிழக்காசியாவிலேயே அதிக கொவிட்19 பாதிப்புகளைக் கொண்ட நாடாக சிங்கை உருவெடுத்துள்ளது.
Comments