புது டில்லி: கொவிட் -19 பாதிப்பைத் தொடர்ந்து கிட்டத்தட்ட ஏழு வாரங்கள் நிறுத்தப்பட்ட இரயில் சேவையை, இந்தியா செவ்வாய்க்கிழமை புது டில்லி மற்றும் முக்கிய நகரங்களுக்கு இடையே மீண்டும் அதன் சேவைகளை தொடங்கியுள்ளது.
“இந்திய இரயில் சேவை மே 12 முதல் 15 இரயில் சேவைகளைத் தொடங்கி படிப்படியாக நடவடிக்கைகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளது” என்று இரயில்வே சேவை அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பயணிகள் முகக்கவசங்கள் அணிய வேண்டும் மற்றும் பரிசோதனை செய்ய வேண்டும், அறிகுறிகள் இல்லாத பயணிகள் மட்டுமே ரயிலில் ஏற அனுமதிக்கப்படுவார்கள்.”
இந்த இரயில் அசாம், மேற்கு வங்கம், பீகார், மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, தமிழ்நாடு, திரிபுரா, கேரளா உள்ளிட்ட பல முக்கிய நகரங்கள் வழியாக செல்லும்.