Home One Line P1 கெடாவில் பாஸ் மந்திரி பெசார் தலைமையில் புதிய அரசாங்கம் அமைகிறது

கெடாவில் பாஸ் மந்திரி பெசார் தலைமையில் புதிய அரசாங்கம் அமைகிறது

852
0
SHARE
Ad

அலோர்ஸ்டார் – கெடா மாநிலத்தில் முக்ரிஸ் மகாதீர் (படம்) தலைமையிலான அரசாங்கம் கலைக்கப்பட்டு பாஸ் மந்திரிபெசார் தலைமையில் புதிய அரசாங்கம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை புதிய மந்திரி பெசாரும் ஆட்சிக் குழு உறுப்பினர்களும் பதவியேற்பர் என்ற தகவல்களை ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன.

நடப்பு மாநில எதிர் கட்சித்தலைவரும் ஜெனரி சட்டமன்றத் தலைவருமான சனுசி முகமட் நோர் புதிய மந்திரிபெசாராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

கெடா மாநில ஆளுநர் சுல்தான் சாலேஹூடின் இப்னி அல்மாஹ்ரும் சுல்தான் பட்லிஷா இன்று வெள்ளிக்கிழமை தனது அரண்மனையில் 36 கெடா சட்டமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து அவர்களின் ஆதரவு நிலைப்பாடு குறித்து கேட்டறிந்தார்.

மாலை 5.30 இந்த சந்திப்புகள் நடைபெற்று முடிந்தன.

பிற்பகல் 4.00 மணியளவில் முக்ரிஸ் மகாதீர் அரண்மனை வந்தடைந்து சுல்தானைச் சந்தித்தார் என்றும் ஊடகங்கள் தெரிவித்தன.

அந்த சந்திப்புகளின் அடிப்படையில் முக்ரிஸ் மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையை இழந்திருக்கிறார் என சுல்தான் திருப்தியடைந்துள்ளார் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது 23 சட்டமன்ற உறுப்பினர்கள் பெரிக்காத்தான் நேஷனல் எனப்படும் தேசியக் கூட்டணிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றனர் என அறியப்படுகிறது.

முந்தைய முக்ரிஸ் அரசாங்கத்தின் இரண்டு பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர்களும் பெர்சாத்து கட்சியின் 4 சட்டமன்ற உறுப்பினர்களும் கட்சி மாறியதைத் தொடர்ந்து முக்ரிஸ் தலைமையிலான அரசாங்கம் கவிழ்ந்தது.