Home One Line P2 கொவிட்19: இந்தியாவில் 100,000 பேருக்கு மேல் பாதிப்பு

கொவிட்19: இந்தியாவில் 100,000 பேருக்கு மேல் பாதிப்பு

770
0
SHARE
Ad

புது டில்லி: அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் உறுதிப்படுத்தப்பட்ட கொரொனா தொற்று சம்பவங்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை 100,000- ஐத் தாண்டியது.

கொரரொனா தொற்றுநோய்க் கண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இப்போது உலகில் 11- வது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,156- ஐ எட்டியுள்ளது என்று துருக்கிய அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

33,053 சம்பவங்களுடன் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக மகாராஷ்டிரா விளங்குகிறது.

#TamilSchoolmychoice

தலைநகர் புது டில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கிய இடங்களில் கொவிட்19 சம்பவங்களின் எண்ணிக்கை 10,054- ஐ எட்டியுள்ளது.

இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.