கோலாலம்பூர்: உலக சுகாதார நிறுவனத்திற்கான நிதிகளைத் துண்டித்து, உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் அச்சுறுத்தியதை, ஐரோப்பிய ஒன்றியம் செவ்வாய்க்கிழமை விமர்சித்தது என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிரம்ப் இந்த விவகாரம் குறித்து, உலக சுகாதார நிறுவன இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயசஸுக்கு எழுதிய கடிதத்தில் திங்களன்று டுவிட்டரில் வெளியிட்டார்.
ஐரோப்பிய ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “இந்த நெருக்கடிக்கு அனைத்துலக ஒத்துழைப்பு மற்றும் பலதரப்பு தீர்வுகளை ஆதரிக்கிறது.” என்று கூறினார்.
“இப்போது ஒன்றுபடுவதற்கான நேரம் இது. அடுத்தவரை பளிச் சொல்லவோ அல்லது மற்றவர்களின் பலவீனங்களைத் தேடவோ, பலதரப்பு ஒத்துழைப்பை சீர்குலைக்கவோ இது நேரமல்ல” என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.
“கொவிட்19 பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கும் குறைப்பதற்கும் உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட முயற்சிகளை ஐரோப்பிய ஒன்றியம் ஆதரிக்கிறது, மேலும் இந்த முயற்சிக்கு கூடுதல் நிதி வழங்கியுள்ளது” என்று அவர் கூறினார்.
“பலதரப்பட்ட முயற்சிகள் மூலம் ஒத்துழைப்பு மற்றும் உலகளாவிய ஒற்றுமை மட்டுமே இந்த போரில் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழியாகும்.” என்று அவர் குறிப்பிட்டார்.