Home One Line P1 நோன்பு பெருநாள் தொற்றுக் குழுவை தவிர்க்க, நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையை கடைப்பிடிக்கவும்

நோன்பு பெருநாள் தொற்றுக் குழுவை தவிர்க்க, நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையை கடைப்பிடிக்கவும்

627
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நோன்பு பெருநாள் தொற்றுக் குழுவை தவிர்க்க, சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையை முஸ்லிம்கள் கடைப்பிடித்தால் போதுமானது என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபா தெரிவித்தார்.

வீட்டிலேயே இருப்பது, பேசும் போது கூடல் இடைவெளியை கடைப்பிடிப்பது, தனிப்பட்ட சுகாதார நடைமுறைகள் மற்றும் அடிக்கடி கை கழுவுதல் மற்றும் அடிக்கடி தொடும் மேற்பரப்புகளை தூய்மையாக வைத்திருத்தல் போன்றவை இதில் அடங்கும் என்று அவர் கூறினார்.

“ஒரே இடத்தில் மக்கள் கூடுவது அல்லது இயக்கம் இருக்கும் போது தொற்றுநோயின் சீற்றத்தை நாம் கவனிக்கிறோம். கிருமி எங்குள்ளது என்று நமக்குத் தெரியாததால் இது தொற்றுநோயை ஏற்படுத்த அனுமதிக்கிறது,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“தடுப்பு மருந்து உருவாக்கப்படும் வரையில், ​​நாம் புதிய விதிமுறைகளை செயல்படுத்த வேண்டும்,” என்று அவர் கூறினார்.