சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இதுவரையிலும் 10,365 பேர் கொவிட்19 தொற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், இன்று மேலும் 570 நேர்மறையான சம்பவங்கள் பதிவானதாகவும், உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக அக்குடியரசின் மொத்த எண்ணிக்கையை 29,364- ஆகக் கொண்டு வந்துள்ளது.
சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தர குடியிருப்பாளர்களில் இரண்டு சம்பவங்கள் மட்டுமே சம்பந்தப்பட்டிருப்பதாக நண்பகல் தரவு காட்டுகிறது. அதே நேரத்தில் தொற்று சம்பவங்களில் பெரும்பாலானவை வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்குமிடங்களில் ஏற்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று பிற்பகுதியில் வெளியிடப்பட்ட அதன் முழு தரவுகளின்படி, சிங்கப்பூர் 1,311 உள்ளூர் சம்பவங்கள், 580 இறக்குமதி சம்பவங்கள் மற்றும் 362 சம்பவங்கள் தங்குமிடங்களுக்கு வெளியே தங்கியுள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள் என்று அது குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், மொத்த சம்பவங்களில் சுமார் 92 விழுக்காடு அல்லது 26,541 பேர் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்குமிடங்களில் இருந்து வந்தவை என்று அது கூறியது.
இன்றுவரை, சிங்கப்பூரில் கொவிட்19 காரணமாக 22 பேர் இறந்துள்ளனர்.