Home One Line P2 இந்தியா செம்பனை எண்ணெயை மீண்டும் வாங்கத் தொடங்கியதால் பங்கு விலைகள் ஏற்றம்

இந்தியா செம்பனை எண்ணெயை மீண்டும் வாங்கத் தொடங்கியதால் பங்கு விலைகள் ஏற்றம்

1083
0
SHARE
Ad

யை கோலாலம்பூர் – நான்கு மாத சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து இந்தியா மீண்டும் மலேசிய செம்பனை எண்ணெயை வாங்கத் தொடங்கியிருப்பதாக  தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இதைத் தொடர்ந்து இன்று கோலாலம்பூர் பங்குச் சந்தையில் பங்கு விலைகள் இன்று ஏற்றம் கண்டன. குறிப்பாக செம்பனைத் தோட்டங்களைக் கொண்ட பங்குச் சந்தை நிறுவனங்கள், செம்பனை எண்ணெய் ஏற்றுமதித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.

இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு மலேசியப் பங்குச் சந்தை இன்று விலையேற்றம் கண்டது.

#TamilSchoolmychoice

பாதுகாப்புக் கையுறைகள் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றம் கண்டன.

1,423.97 புள்ளிகள் வரை உயர்வு கண்ட பங்குச் சந்தை திங்கட்கிழமையை விட 13.81 புள்ளிகள் இன்று அதிகரித்தது.

4.64 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 9.5 பங்குகள் பங்குச் சந்தையில் கைமாறின. திங்கட்கிழமையன்று 4.40 பில்லியன் மதிப்பிலான 11.21 பில்லியன் பங்குகள் கைமாறி சாதனை புரிந்திருந்த நிலையில் இன்றைய மதிப்பு அதை விட அதிகமாகும்.

தேசியக் கூட்டணி ஆட்சியின் கீழ் இந்தியா, மலேசியா இடையில் நல்லுறவுகள் வலுப்படத் தொடங்கியுள்ளன. கடந்த வாரத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிக பட்சமாக 100,000 டன் இந்திய அரிசியை மலேசியா வாங்கியது.

200,000 டன் செம்பனை எண்ணெயை மலேசியாவிடமிருந்து இந்திய இறக்குமதியாளர்கள் வாங்கியிருக்கின்றனர்.