Home One Line P2 மலேசிய செம்பனை எண்ணெயை இந்தியா மீண்டும் வாங்கத் தொடங்கியது

மலேசிய செம்பனை எண்ணெயை இந்தியா மீண்டும் வாங்கத் தொடங்கியது

867
0
SHARE
Ad

மும்பை – இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையில் அரசாங்க நிலையில் ஏற்பட்ட கருத்து மோதல்களினால் கடந்த 4 மாதங்களாக மலேசிய செம்பனை எண்ணெயை வாங்குவதை இந்தியா நிறுத்தியிருந்தது.

தேசியக் கூட்டணி அரசாங்கம் பொறுப்பேற்றதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவுகள் மேலும் வலுப்பட்டுள்ளன. கருத்து வேறுபாடுகள் களையப்பட்டிருக்கின்றன.

இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் இந்திய வணிகர்கள் மலேசிய செம்பனை எண்ணையை வாங்கத் தொடங்கியிருக்கின்றனர். செம்பனை எண்ணெய் விலையின் வீழ்ச்சியும் இந்திய வணிகர்கள் மலேசியாவின் பக்கம் திரும்பியிருப்பதற்கான காரணங்களில் ஒன்றாகும்.

#TamilSchoolmychoice

மேலும் கடந்த வாரத்தில் 100,000 டன் இந்திய அரிசியை வாங்கும் ஒப்பந்தம் ஒன்றில் மலேசியா கையெழுத்திட்டது.

இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவுக்கு இதுவும் ஓர் உதாரணமாகும்.

கடந்த வாரத்தில் 200,000 டன் சுத்திகரிக்கப்படாத செம்பனை எண்ணையை மலேசியாவிடமிருந்து வாங்க இந்திய இறக்குமதியாளர்கள் ஒப்பந்தங்கள் செய்தனர்.

இந்த எண்ணெய் எதிர்வரும் ஜூன், ஜூலை மாதங்களில் இந்தியாவுக்கு ஏற்றுமதியாகும்.

மலேசிய செம்பனை எண்ணெயின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதால், இந்திய துறைமுகங்களில் சேமிப்புக் கிடங்குகளில் வைக்கப்பட்டிருந்த செம்பனை எண்ணெயின் கையிருப்பும் விரைவாகத் தீர்ந்திருக்கிறது.

2020-ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் இந்தியாவின் செம்பனை எண்ணெய் இறக்குமதியின் அளவு 50 விழுக்காட்டுக்கும் கூடுதலாக வீழ்ச்சியடைந்தது.

உணவுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெயை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடத்தை வகிக்கிறது.