Home One Line P1 கொவிட்19 பிரத்தியேக அழைப்பு எண் மூலமாக மனநல பிரச்சனைகள் புகார் அதிகம்

கொவிட்19 பிரத்தியேக அழைப்பு எண் மூலமாக மனநல பிரச்சனைகள் புகார் அதிகம்

646
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் ஆரம்ப நாட்களிலிருந்து கொவிட் 19 பிரத்தியேக அழைப்பு எண் மூலமாக மொத்தம் 8,380 அழைப்புகள் பதிவு செய்யப்பட்டன என்றும் அவற்றில் பல மனநல பிரச்சனைகள் தொடர்பானவை என்றும் சுகாதார அமைச்சு இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

இந்த அழைப்புகளில் சுமார் 46.8 விழுக்காடு மன அழுத்தம், பதட்டம் மற்றும் கோபம் போன்ற உணர்ச்சிகரமான பிரச்சனைகள் உடன் இணைக்கப்பட்டுள்ளன.

கோபம்- நிதிப் பிரச்சனைகள், வருமானம் இல்லை மற்றும் குடும்ப உறுப்பினர்களிடையே தவறான புரிதல் போன்ற சமூக காரணிகளால் ஏற்பட்டதுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

சுமார் 20 விழுக்காடு அழைப்புகள் கொவிட் -19 உடன் இணைக்கப்பட்டுள்ளன. பலர் இந்த நோயைப் பற்றி கவலைப்படுகிறார்கள்.

“நாங்கள் அவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். சரியான தகவல் இல்லாததால் சில நேரங்களில் அவர்கள் கவலைப்படுகிறார்கள், ”என்று அவர் கூறினார்.

மற்றொரு 6.9 விழுகாட்டினர் அடிப்படை தேவைகளுக்கான உதவிக்காக அழைத்துள்ளனர். 6 விழுக்காடு வீட்டு வன்முறையுடன் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

2.4 விழுக்காட்டினர் மனச்சோர்வு போன்ற மனநல பிரச்சினைகளுக்காகவும், 0.2 விழுக்காடு சிறார் கொடுமை காரணமாகவும் பெறப்பட்டுள்ளன.

இந்த பிரத்தியேக அழைப்புகள சுகாதார அமைச்சின் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் நிர்வகித்தனர். அவர்கள் தேவைப்படுவோருக்கான ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.