Home One Line P1 சட்டவிரோத குடியேறிகள் முகாம்களில் ஊழியர்களின் பாதுகாப்பு கவனத்தில் கொள்ள வேண்டும்- கியூபெக்ஸ்

சட்டவிரோத குடியேறிகள் முகாம்களில் ஊழியர்களின் பாதுகாப்பு கவனத்தில் கொள்ள வேண்டும்- கியூபெக்ஸ்

669
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19 நோய்த்தொற்றின் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக அனைத்து குடிநுழைவுத் துறைத் தடுப்பு முகாமில் உள்ள பணியாளர்களுக்கு போதுமான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை (பிபிஇ) வழங்குமாறு பொது சேவை தொழிலாளர் சங்க காங்கிரஸ் (கியூபெக்ஸ்) அரசாங்கத்தை கோரியுள்ளது.

குடிநுழைவுத் துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை மற்றும் பாதுகாப்பு ஆலோசகராக சுகாதார அமைச்சின் அதிகாரிகளை நியமிப்பதன் மூலமும், நோயாளிகள் அல்லது கைதிகளை கையாள்வதில் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளுக்கு இணங்குவதை கண்காணிப்பதன் மூலமும் முகாம்களில் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்றும் அதன் தலைவர் அட்னான் மாட் கூறினார்.

“முகாமில் நிலைமை இன்னும் கட்டுப்பாட்டில் இருந்தபோதிலும், ஊழியர்கள் சிலர் தங்கள் பாதுகாப்பு குறித்து கவலைப்படுவதாக புகார்கள் வந்தன. அனைத்து ஊழியர்களுக்கும் கொவிட்-19 நேர்மறை நோயாளிகளைக் கையாளும் அனுபவம் இல்லை.

#TamilSchoolmychoice

“எனவே, இந்த நடவடிக்கைகள் (பிபிஇக்கள் மற்றும் கள மருத்துவமனைகள்) பொருத்தமானவை, ஏனெனில் அவை முகாமில் தொற்றுநோயைத் தடுக்கும் மற்றும் அவர்களின் பாதுகாப்பு அம்சங்கள் இலகுவாக எடுத்துக் கொள்ளப்படாததால் ஊழியர்களை பணி செய்ய ஊக்குவிக்கும்” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக, சிப்பாங், புக்கிட் ஜாலில் மற்றும் செமினி ஆகிய இடங்களில் சட்டவிரோதமாக குடியேறியவரகள் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் முகாம்களில் கொவிட் -19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பைக் கண்டுள்ளது.