கோலாலம்பூர்: அரசு ஊழியர்களின் சம்பளத்தை ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் பரிசீலிக்க வேண்டும் என்று பொதுச்சேவை பணியாளர் சங்கம் (கியூபெக்ஸ்) பரிந்துரைத்துள்ளது.
அதன் தலைவர் டத்தோ அசி முடா கூறுகையில், அரசு ஊழியர்களின் சம்பளம், குறிப்பாக உதவியாளர்கள் பிரிவில் உள்ள பணியாளர்களுக்கு, இரண்டு வாரங்களுக்கு மட்டுமே தற்போதைய சம்பளமானது செலவிடும் வகையில் இருப்பதாகக் கூறினார். இதில் பயன்பாட்டு கட்டணங்கள், கழிவுநீர், தொலைபேசி மற்றும் வீட்டில் உணவு உண்பது அடங்குகிறது.
கியூபெக்ஸ்யின் ஆய்வுப்படி, கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிகளில், வாழ்க்கைச் செலவை ஈடுகட்ட ஓர் ஊழியருக்கு மாதத்திற்கு 2,640 ரிங்கிட் வருமானம் தேவை என்பதைக் காட்டுவதாகவும், அதே நேரத்தில் ஒரு குடும்ப உறுப்பினர் என்றால் 4,200 ரிங்கிட்டுக்கு சம்பளம் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.
“குழந்தைகளின் கல்வி நோக்கத்திற்காக (பணத்தை) சேமிப்பது போதாது. குழந்தைகளை குழந்தை வளர்ப்பகத்திற்கு அனுப்புவது அதன் சார்புநிலையை அதிகரிக்கிறது. சம்பளத்தை உயர்ர்துவது குறித்து அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும்” என்று நேற்று செவ்வாயன்று இங்கு நடைபெற்ற 28-வது கியூபெக்ஸ் மாநாட்டின் தொடக்க விழாவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.