கோலாலம்பூர்: பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் முன்னாள் காவல் துறையின் சிறப்பு அதிரடி பிரிவு அதிகாதியான அசிலா ஹாத்ரியை சந்தித்தாரா என்று வினவப்பட்டபோது வெறும் தலையை அசைத்து அங்கிருந்து நகர்ந்ததாகக் கூறப்படுகிறது.
அக்கேள்வி கேட்கப்பட்ட உடனேயே அவர் பத்திரிகையாளர் சந்திப்பிலிருந்து வெளியேறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் மங்கோலிய பெண் அல்தான்துன்யா ஷாரிபுவைக் கொல்ல உத்தரவு பிறப்பித்ததாக அசிலா சமீபத்தில் தனது சட்டப்பூர்வ அறிவிப்பில் கூறியிருந்தார்.
இருப்பினும், இது வெறும் கட்டமைக்கப்பட்ட கதை என்று நஜிப் இந்த விஷயத்தை மறுத்தார்.
முன்னதாக, நஜிப்பின் வழக்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லா, கடந்த பிப்ரவரி மாதம் காஜாங் சிறைக்கு வெளியே ஒரு முக்கியப் புள்ளி அசிலாவைச் சந்தித்ததாகக் கூறியிருந்தார்.