Home One Line P1 “அல்தான்துன்யாவை நான் கொல்லச் சொன்னேனா? அசிலா, அரசாங்கம் தொடுக்கும் கட்டுக்கதை!”- நஜிப்

“அல்தான்துன்யாவை நான் கொல்லச் சொன்னேனா? அசிலா, அரசாங்கம் தொடுக்கும் கட்டுக்கதை!”- நஜிப்

861
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அல்தான்துன்யா ஷாரிபுவை கொலை செய்ய உத்தரவிடப்பட்டதாக முன்னாள் காவல் துறையின் சிறப்பு அதிரடி பிரிவுக் குழு உறுப்பினர் அசிலா ஹாட்ரி கூறிய குற்றச்சாட்டுகளை நஜிப் ரசாக் மறுத்துள்ளார்.

மலேசியாகினியிடம் பேசிய முன்னாள் பிரதமர், 2006-இல் மங்கோலிய படுகொலை செய்யப்பட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு  ஏன் இந்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது என்று கேள்வி எழுப்பினார்.

இது நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் நிர்வாக பலவீனங்களை திசை திருப்புவதற்காக எடுக்கப்பட்ட சூழ்ச்சி என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

இது வெறுமனே தூக்கிலிடப்படுவதைத் தவிர்க்க சம்பந்தப்பட்டவரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ஏன் இதற்கு முன் வெளிவரவில்லை, ஆனால் இப்போது அவர் (அல்தாந்துன்யா) இறந்து ஒரு தசாப்தத்திற்கும் மேலாகியும், 19 மாதக் காலத்திற்குப் பிறகு நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி அமைத்ததற்குப் பிறகு ஏற்படுகிறது?” என்று கேள்வி எழுப்பினார்.

இது அசிலா மற்றும் நம்பிக்கைக் கூட்டணிக்கு இடையிலான ஒரு ஒப்பந்தம் என்று நான் நம்புகிறேன். மரண தண்டனை இரத்து செய்யப்படும் அல்லது அதற்கு பதிலாக ஒத்திவைக்கப்படும் என்று உறுதியளித்திருக்கலாம். இது திசை திருப்பவும், என்னைத் தாக்கவும் எடுக்கப்பட்ட முயற்சிஎன்று அவர் கூறினார்.

அசிலா தனது சட்டரீதியான வாக்குமூலத்தில் நஜிப் அவ்வாறு செய்ய உத்தரவிட்டதாகக் கூறினாலும், நஜிப் ஒருபோதும் அல்தான்துன்யாவை சந்தித்ததில்லை என்று கூறினார்.

இம்மாதிரியான வாக்குமூலங்கள் எவர் வேண்டுமானாலும் உருவாக்கலாம் என்று நஜிப் கூறினார்.

நீங்கள் இம்மாதிரியான வாக்குமூலங்களை நம்புவதாகக் இருந்தால், எட்டாவது பிரதமருக்கு (அன்வார் இப்ராகிம்) எதிராக செய்யப்பட்ட சமீபத்திய பாலியல் குற்றசாட்டு வாக்குமூலத்தையும் நம்ப வேண்டும்,” என்று அவர் கூறினார்.