Home One Line P1 தித்திவாங்சா ஏரி பூங்கா இன்று முதல் மூடப்படும்

தித்திவாங்சா ஏரி பூங்கா இன்று முதல் மூடப்படும்

681
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இங்குள்ள தித்திவாங்சா ஏரி பூங்கா, இன்று வியாழக்கிழமை முதல் பொதுமக்களுக்கு முழுமையாக மூடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் இன்று தமது முகநூல் பதிவில், இப்பூங்காவிற்கு அதிக எண்ணிக்கையிலான வருகையாளர்கள் வருவதால் கொவிட்19 பாதிப்பதைத் தடுக்கும் நோக்கில் இந்த மூடல் அறிவிக்கப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது.

“இருப்பினும், பூங்காவிற்கு வெளியே அல்லது அதைச் சுற்றிலும் மெது ஓட்டம் இன்னும் அனுமதிக்கப்படுகிறது,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.