கோலாலம்பூர்: முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாதிக் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் போது பெரும்பாலான செயல்பாடுகள் நிறுத்தப்பட்ட பின்னர் பல்கலைக்கழகக் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளார்.
கல்விக் கட்டணம் இன்னும் செலுத்த வேண்டியிருப்பதாக மாணவர்களிடமிருந்து புகார்கள் வந்ததாக அவர் கூறினார்.
“சராசரி நபர் வீடு திரும்பியிருந்தாலும், அவர்களின் கல்வி நிறுத்தப்பட்ட போதும், கட்டணம் இன்னும் அப்படியே உள்ளது.
“என்னைப் பொறுத்தவரை, இது விரைவில் மாற வேண்டும்,” என்று அவர் கூறினார்.
எந்தவொரு வகுப்பும் இயங்கலை மூலமாக மட்டுமே நடத்தப்படும் என்று அவர் கூறினார்.
“சில மாணவர்களுக்கு இணைய அணுகல் இல்லை, எனவே அவர்களால் அதைப் படிக்க முடியாது. பல்கலைக்கழக உள்கட்டமைப்பு இனி பயன்படுத்தப்படாது.” என்று அவர் இன்று முகநூல் வழியாக ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
பல்கலைக்கழகக் கட்டணங்கள் மீதான சுமையை அரசாங்கம் அதிகரிக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
“அவர்களின் நல்வாழ்வைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். அது மறுக்க முடியாத ஒரு பொறுப்பு.
“நடமாட்டக் கட்டுப்பாடு போது, கட்டணம் செலுத்தும் சுமை காரணமாக கல்வியில் இருந்து மாணவர்கள் யாரும் வெளியேறக்கூடாது.” என்று அவர் கூறினார்.