கோலாலம்பூர்: ஈப்போவில் உள்ள கொவிட்19 தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து தப்பிய ரோஹிங்கியா நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
முன்னதாக, கொவிட்19 இருப்பதாக சந்தேகிக்கப்படும் ரோஹிங்கியா அகதி ஒருவர் தஞ்சோங் ரம்புத்தானில் உள்ள ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து தப்பிச் சென்றதாக பேராக் காவல் துறை துணைத் அனுவார் ஒத்மான் கூறினார்.
ரோஹிம் முகமட் சோகாரியா, 27, ஞாயிற்றுக்கிழமை (மே 31) காலை 11 மணியளவில் சுகாதார அமைச்சக பயிற்சி நிறுவனத்தில் தனது அறையில் இருந்து காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
“சுகாதாரப் பணியாளர்கள் அங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மீது சோதனைகளை நடத்தவிருந்தனர். அவர் தனது அறையில் காணப்படவில்லை.
“அவர்கள் தேடினார்கள், ஆனால் அவரை வளாகத்திற்குள் கண்டுபிடிக்க முடியவில்லை,” என்று அவர் கூறினார்.