Home One Line P1 நாடு முழுவதும் குடிபோதை தடுப்பு நடவடிக்கை அமல்படுத்தப்படும் – காவல் துறை

நாடு முழுவதும் குடிபோதை தடுப்பு நடவடிக்கை அமல்படுத்தப்படும் – காவல் துறை

641
0
SHARE
Ad

கோலாலம்பூர்: குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் குடிபோதை தடுப்பு நடவடிக்கையை காவல் துறையினர் ஏற்படுத்த உள்ளனர்.

இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் மே முதல் சுமார் 822 பேர் குடிபோதையில் வாகனம் செலுத்தியதால தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் இன்று ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்தது.

ஜனவரி மற்றும் மே மாதங்களுக்கு இடையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் 15 முதல் 41 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று புக்கிட் அமான் விசாரணை மற்றும் அமலாக்கத் துறை இயக்குனர் டத்தோ அசிஸ்மான் அலியாஸ் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

சாலை போக்குவரத்து சட்டம் 1987- இன் பிரிவு 45ஏ கீழ் அவை விசாரிக்கப்படுகின்றன.

“நாடு முழுவதும் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை காவல் துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை மூலம் கட்டுப்படுத்தும், வாங்கவும் பெறவும் மிகவும் எளிதான மது விற்பனைகளை மற்ற சட்ட அமலாக்க நிறுவனங்கள் வலுவான நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்த நான் கேட்டுக்கொள்கிறேன்.” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.