Home One Line P2 கொவிட்19: சிங்கப்பூரில் புதிதாக 569 பேருக்கு பாதிப்பு

கொவிட்19: சிங்கப்பூரில் புதிதாக 569 பேருக்கு பாதிப்பு

561
0
SHARE
Ad

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கொவிட்19 நோய்த்தொற்றுக்கு கூடுதலாக 569 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக அங்கு மொத்தமாக 36,405 சம்பவங்கள் பதிவாகி உள்ளது.

பெரும்பாலான சம்பவங்கள் தங்குமிடங்களில் வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளிடையே ஏழு சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக குடியரசின் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் வெளியிடப்பட்ட முழு தரவுகளில், சிங்கப்பூர் 1,689 உள்ளூர்வாசிகள் சம்பவங்கள், 580 இறக்குமதி செய்யப்பட்ட சம்பவங்கள் மற்றும் 33,567 வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்குமிடங்களில் ஏற்பட்ட சம்பவங்கள் என்று குறிப்பிட்டிருந்தது.

#TamilSchoolmychoice

மொத்தம் 23,175 நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனர்.