Home One Line P2 ‘அவதார்’ இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் நியூசிலாந்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார்

‘அவதார்’ இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் நியூசிலாந்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார்

862
0
SHARE
Ad

நியூசிலாந்து: ‘அவதார்’ திரைப்பட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன், 50-க்கும் மேற்பட்ட படக்குழுவினர்களுடன், மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘அவதார்’ பட தொடர்களின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க நியூசிலாந்த்தை சென்றடைந்துள்ளார்.

அதற்கு முன்னதாக இந்த 54 பேர் கொண்ட படப்பிடிப்புக் குழுவினரை அந்நாடு தனிமைப்படுத்தி உள்ளது. இதனால், படப்பிடிப்பு உடனடியாக மறுதொடக்கம் செய்யப்படாது.

இப்படத்தின் தயாரிப்பாளர் ஜான் லாண்டவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜேம்ஸ் கேமரூனும், அவரும் இருக்கும் புகைப்படங்களை இணைத்து, தாங்கள் 14 நாட்கள்  அரசாங்கத்தின் மேற்பார்வையிடப்பட்ட சுயதனிமையில் இருப்பதாகக் பதிவிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

‘அவதார் 2′ 2021-இல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.